முழு ஊரடங்கிலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்த 50க்கும் மேற்பட்ட திருமணங்கள்.!

Default Image

முழு ஊரடங்கான நேற்றைய தினம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலின் வளாகத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது.

தேவநாதசுவாமி கோவில் என்பது 108வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் கடலூரில் உள்ள திருவந்திபுரத்தில் உள்ளது . இங்கு முகூர்த்த தினங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோவில் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முழு ஊரடங்கு தினமான நேற்று 50க்கும் அதிகமான திருமணங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர்களுடன் அந்த கோவிலின் வெளிப்பிரகாரத்திலும், திருவந்திபுரத்தில் உள்ள திருமண மண்டபங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது. அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறதா என்பதை போலீசார் கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக கூறிய போலீஸ் அதிகாரி,ஏற்கனவே திருமண நாளை குறித்து விட்டதாகவும், அரசு நடைமுறைகளை பின்பற்றி திருமணத்தை நடத்தலாம் என்று திருமண வீட்டார்கள் கூறியதாகவும், அவ்வாறு அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் திருமணம் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும், கூட்டம் அதிகமாக இருந்தாலோ, அரசு விதிமுறைகளை மீறினாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்