இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரி கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் போராட்டம்!
இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஓட்டுநர்கள் போராட்டம்.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர் இ பாஸ் உத்தரவை பெற்று அதன் பின்னே செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனால் இ பாஸ் விண்ணப்பிக்க கூடிய 100 பேரில் 10 பேருக்கு கூட இதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. இதனால் பேருந்து ஓட்டுனர்கள் பெரும் அவதிப்படுவதாகவும் பேருந்தை ஓடச் சொல்லி விட்டு மக்களை நகர விடாமல் வைத்திருப்பது என்ன நியாயம் எனவும் பலர் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பேருந்து நிலையத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறு மாற்றிக் கொண்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் நூதன போராட்டம் முறையில் ஈடுபட்டுள்ளனர்.