தூத்துக்குடியில் இன்று 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடையடைப்பு..!
தூத்துக்குடியில் இன்று 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக அந்த சங்கத்தினுடைய செயலாளர் முனியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இன்று கடையடைப்பு பங்கு கொள்கின்றது . இதனால் மத்திய அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வணிகம் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.