தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 121 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வரிசையில், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,072 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 16 நாட்களாக, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…