சென்னையில் 4 மண்டலங்களில் 2000 பேருக்கு மேல் பாதிப்பு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 1072 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 3,388 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2123 பேரும், திரு.வி.க. நகரில் 1855 பேரும், தேனாம்பேட்டையில் 2,136 பேரும், தண்டையார்பேட்டையில் 2261 பேரும், அண்ணா நகரில் 1660 பேரும் மற்றும் அடையாறில் 1042 பெரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.