தூத்துக்குடியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தவெகவில் இணைந்தனர்.!
தமிழக வெற்றிக்கழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி : தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக கட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த ஏராளமான பெண்கள் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தங்களை தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்சியில் இணைந்த பெண்களுக்கு தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், பெண் விடுதலை இல்லையெனில் மண் விடுதலை இல்லை என கூறிய தளபதி (விஜய்), சமத்துவம் என்பது ஆண்கள் மட்டுமல்ல அவர்களுக்கு நிகராக பெண்களையும் உயர்த்துவது தான் ஆகும் நம் நாட்டின் குறிப்பாக அரசியல் கட்சிகளில் சமத்துவம் போற்றப்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி பெண்கள் பொதுவாகவே திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பலர் உதாரணமாக இருக்கின்றனர்.
விண்வெளி துறையில் கல்பனா சாவ்லாவில் இருந்து, அரசியல் களத்தில் அம்மையார் இந்திரா காந்தி அம்மையார், அம்மையார் ஜெயலலிதா, மதிப்பிற்குரிய மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றவர்களை குறிப்பிட்டு காரணம் காட்டலாம். உடன் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். இன்று பல துறைகளிலும் குறிப்பாக சொல்லப் போனால் வணிக துறையாக இருக்கட்டும் அல்லதுஆளுமை சார்ந்த துறைகளாக இருக்கட்டும் பெண்களின் மதிப்பு நிறைய இடங்களில் வெளிப்பட்டு வருகிறது. ஆனால், அரசியல் துறையில் சில பெண்களே அதில் குறிப்பிட்ட அளவில் பங்கு கொள்கிறார்கள். ஆனால், நமது தமிழக வெற்றி கழகத்தில் சம வாய்ப்பு சம உரிமை மூலம் நமது தளபதியார் நமக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
ஒரு பெண் தலைமை பொறுப்பில் இருந்தால் நற்செயல்கள் மலர்ந்திடும் என்ற நம்பிக்கையை நாம் விதைக்க வேண்டும். உங்களுக்கு இந்த நிகழ்ச்சி தொகுப்பானது எனும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இணைந்து இருக்கின்ற இந்த மகளிர் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய மகளிர்களாக நாம் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.
சட்டமன்றமாக இருக்கட்டும் பாராளுமன்றமாக இருக்கட்டும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், நமது தளபதியார் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்ல பெண்களுக்கான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் என்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் நாம் அனைவரும் மாற்றத்தை உருவாக்கப் போராட வேண்டும். மாற்றத்தை முதலில் குடும்பத்தில் இருந்து உருவாக்க வேண்டும். கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி நான் மட்டுமல்ல நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும். ” என்று தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் விழாவில் பேசினார்.