மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா பிறந்த நாளில் 3 பேருக்கு நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 14 பேரில் ஒருவர் இறந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். விடுதலை செய்ததற்கான அரசாணையை இன்னும் பெறவில்லை.எனவே அரசாணை நகலை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதி வைத்தியநாதன் , வெங்கடேஷ் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் அரசாணை குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றமும் , உயர் மன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்கள் வழங்கப் பட்டன.இதை தொடர்ந்து நீதிபதிகள் மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கொலை வழக்கில் 13 குற்றவாளிகளுக்கு எதன் அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுப்பினர்.
வழக்கறிஞர் ரத்தினத்தின் மனு எதன் அடிப்படையில் பரிசீலினைக்கப்பட்டது ?என்பது குறித்து நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கும் போது அதற்கான பட்டியலை தயார் செய்து முன்னுரிமை அடிப்படையில் தான் விடுவிக்க வேண்டும். அந்த வகையில் தான் அவர்களுக்கு விடுதலை கொடுக்கப்பட்டதா ? எந்த அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டது என என்பது குறித்து நீதிமன்றம் அரிய விரும்புகிறது என கூறினார்.
மேலும் மனுதாரர் தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை 25-ம் தேதி ஒத்தி வைத்தனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…