கஜா புயலால் 12000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைப்பு …!
நாகையின் கிழக்கே 125 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இதனால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூர் – 381 பேர் , நாகை – 10,692 பேர், ராமநாதபுரம் – 66பேர், தஞ்சை – 167 பேர், 1,782 குழந்தைகள் உள்பட மொத்தம் 12,398 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.