பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக புகார் அளித்து வருகின்றனர்.
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார்.
ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.பின்னர்,அவரது சொகுசு கார்கள்,லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர், பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து,பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.
இதனையடுத்து,பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் dcpccbi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்,பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…