தொடர் மழையால் மேலும் இரண்டு மாவட்டத்திற்கு விடுமுறை..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை , தஞ்சாவூர் , திருவாரூர் ,மற்றும் நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை இந்த மழையானது தீவிரமடைந்ததால் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் சென்னை ,காஞ்சிபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.