மேலும் புதிய தளர்வுகள்- நாளை முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாகவும், மேலும் சில தளர்வுகள் கொடுப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார்.
கடந்த வாரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் 28-ஆம் தேதியுடன் ஊரடங்கும் முடிவதால் இந்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுகிறார்.