மேலவளவு கொலை வழக்கில் 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.அதில் 2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக 3 பேரை முன்விடுதலை செய்தனர். பின்னர் ஒருவர் இறந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து மீதம் உள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசு உத்தரவிட்ட நிலையில், கடந்த 9-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.முன்விடுதலை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது முன் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய கூடாது. வழக்கு முடியும் வரை 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.வேலூரில் தங்கி இருப்பதை மதுரை, வேலூர் எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து முன் விடுதலை தொடர்பான அரசாணை தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளா்த்த வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்டவா்கள் தரப்பு கோரிக்கை வைத்தனர் .பின்னர் வழக்கு முடியும் வரை 13 பேரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்றும், வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.மேலும் வழக்கின் விசாரணையை மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…