சென்னையில் இன்று முதல் தொடங்கப்பட்ட மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம்.!

Default Image

சென்னையில் மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் இ-பாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசின் வழிக்காட்டுதல்களின் படி, பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் 50% இருக்கைகளை பயன்படுத்தி பயணிகள் முககவசம் அணிந்து கொண்டு பயணிக்கின்றனர்.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் உள்ள ரூ. 1,000 பஸ் பாஸ் உபயோகிக்கவில்லை என்று பலர் குற்றச்சாட்டியதை அடுத்து, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை இந்த பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என்றும், மாதாந்திர புதிய பஸ் பாஸ்களை கொடுக்க தொடங்கியதாகவும் போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் பஸ் பாஸ் வழங்கும் இடம் செயல்படாத நிலையில் இன்று முதல் சென்னையில் மாதாந்திர பஸ் பாஸ்கள் வழங்க தொடங்கியுள்ளது . கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று கொண்டு பஸ் பாஸை பெற்று கொள்ளலாம் என்றும், அதனை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு பின்னர் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்