பருவமழை- கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

Published by
murugan

மாவட்ட அளவில் 1294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் (ERT) Emergency Response Team ஏற்படுத்தப்படுகிறது.

வடகிழக்குபருவமழை முன்னேச்சரிக்கையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

 கட்டுப்பாட்டு அறை – Control Room

  • வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறை மாவட்ட நிலையில் ஏற்படுத்தப்படுகிறது.
  • பொதுமக்களுக்கு எளிதாக அணுக 1800 425 5880 என்ற இலவச தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியினை மையத்தின் இலவச எண் 1962.

2. அவசர கால நடவடிக்கை குழு Emergency Response Team

  • மாவட்ட அளவில் 1294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் (ERT) Emergency Response Team ஏற்படுத்தப்படுகிறது.

 விலங்குகள் காப்பகம் Shelters for abandoned animals

  • 1740 கால்நடை மீட்பு மையங்கள் /தங்குமிடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நிறுவப்பட உள்ளன.
  • அடையாளம் காணப்பட்ட இடங்களில், மீட்கப்பட்ட கால்நடை / கோழிகளின் போக்குவரத்ததிற்கும், தீவனம், தீவனப்பயிர் மற்றும் குடிநீரரை எளிதாக திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட விலங்குகள் இந்நோக்கத்திற்காக அடையாளம் காணப்பட்ட மீட்பு மையங்கள்/முகாம்களுக்கு விரைவாக மற்றும் தீவிரமாக கொண்டு செல்லப்படும்.
  • எந்தவொரு அவசரகால தேவைகளையும் சமாளிக்கவும், கால்நடை நிலையங்களில் கால்நடைபராமரிப்புத் துறையில் போதுமான கால்நடை மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • 56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் வெள்ளத்தின் போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பயன்படும்.

தீவனம் கிடைப்பதை உறுதி செய்தல் – Fodder Availability

  • கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையத்தில் (CBFD) தொகுதி வாரியாக தீவனம் கிடைப்பது (பச்சை மற்றும் உலர்) மற்றும் பற்றாக்குறை நிலை பற்றிய தரவுத்தளம் பராமரிக்கப்படுகிறது.
  • தொடர்ந்து (Continuesly) தீவனம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பட்டியல், பரப்பு மற்றும் தீவன வகைகளுடன் (தொகுதி வாரியாக) பராமரிக்கப்படுகிறது.
  • விவசாயிகள் மற்றும் அரசு பண்ணைகளில் கிடைக்கும் உபரி தீவனம் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல் – Drinking water availability

  • கால்நடை நிறுவனங்களில் கட்டப்பட்ட 1215 தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

சுகாதார பராமரிப்பு உறுதி செய்தல்: – Ensuring Hygiene and sanitation

  • உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து கிருமி நீக்கம் செய்ய பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, முறையான உரம் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம் நோய்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கால்நடை சுகாதார முகாம்கள்- Veterinary Health camps

  • கால்நடைகள் மற்றும் கோழிகளின் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் 1294 கால்நடை சுகாதார முகாம்கள் மேற்கொள்ளப்படும்.
  • அனைத்து களப் பணியாளர்களும் அதற்கேற்ப கவனமுடன் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
murugan

Recent Posts

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

5 minutes ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

12 minutes ago

பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…

34 minutes ago

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

44 minutes ago

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

2 hours ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

2 hours ago