“தீவிரமடைகிறது பருவமழை..இந்த மாவட்டங்கள் எச்சரிக்கையா இருங்க”! அலர்ட் கொடுத்த டெல்டாவெதர்மேன்!

சுமத்ரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர்  கூறியுள்ளார்.

Weatherman Hemachander R

சென்னை : வடகிழக்கு பருவமழை டிசம்பர் 11-ஆம் தேதி இரவு முதல் 15-ஆம் தேதி வரை தீவிரமடைகிறது என டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் கொடுத்த தகவலின் படி, இன்று (06.12.2024) முதல் அடுத்த 5 நாட்களுக்கு (11.12.2024) வரை தமிழகத்தில் வறண்ட வானிலையும், இரவு/அதிகாலை அதிக பனிப்பொழிவும் நிலவும் என இந்த தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்காது என்பதால் இன்று முதல் அடுத்த 5 நாட்களில் டெல்டா, தென் மாவட்டம், உள் மாவட்ட விவசாயிகள் பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு போன்ற வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம் என கூறினார்.

அதைப்போல, காற்று சுழற்சி படிப்படியாக வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து டிசம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நான்காம் சுற்று வடகிழக்கு பருவமழையை கொடுக்கும்.இதன் காரணமாக, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலாக மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது. வடகடலோரம் & டெல்டாவில் பிரதான மழைப்பொழிவை கொடுக்கும்.

அதேசமயம் சுமத்ரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இத்தாழ்வு பகுதி நன்குமைந்த தாழ்வு பகுதியாக மாறி தமிழகம்/இலங்கை கடற்கரை நோக்கி நவம் 12ம் தேதி வாக்கில் நகரக்கூடும்.

இச்சலனம் புயலாக மாற வாய்ப்பு குறைவு என்றாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அப்படி உருவானது என்றால் வடகடலோரம்/ டெல்டா மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிககனமழையை கொடுக்கும்.

புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை.ஒட்டுமொத்தமாக டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து அடுத்தடுத்து நான்காம் சுற்று & ஐந்தாம் சுறு மழைப்பொழிவை கொடுக்க இருக்கிறது” எனவும் தகவலை டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர்  தெரிவித்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்