2021ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ .97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழையின்போது அறுவடைக்கு தயாராக இருந்த கார் குறுவை சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடாக எக்டர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கிடவும், சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட எக்டர் ஒன்றுக்கு ரூ.6038 மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணுட்ட உரம், யூரியா மற்றும் DAP அடங்கிய பொருட்கள் வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் சம்பா பருவத்தில் பாதிப்படைந்த பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.6038 என்ற வீதத்தில் நிதியாக அளித்திட முடிவு எடுக்கப்பட்டது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிற்குரிய 3,16,837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.168 கோடியே 35 லட்சம் முதல்வரால் விடுவிக்கப்பட்டது. பயிர் நிவாரணத் தொகை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு 06.01.2022 அன்று வழங்கப்பட்டது.
முதல்வர் மத்திய அரசின் பேரிடர் நிதியை எதிர்பார்த்து காத்திராமல் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் மாநில அரசின் நிதிமூலம் ரூ.168.35 கோடி விடுவித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விபரங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பொங்கலை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை மற்றும் வங்கிகளின் விடுமுறை காரணமாகவும், நிவாரண நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 2021ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு தற்போதுவரை 2,23,788 விவசாயிகளுக்கு ரூ.97.92 கோடி நிவாரணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு 2 நாட்களில் நிவாரண நிதி வரவு வைக்கப்படும். இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…