குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.
உலக நாடுகளில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு அம்மைக்கு அறிகுறிகள் என கூறப்படுகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
இந்த நிலையில், குரங்கு காய்ச்சல் குறித்து தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் தகவல் தரவேண்டும். அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலர் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்பளங்கள் உடையவர்களையும், குரங்கு அம்மை சந்தேகிக்கும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களின் விவரங்களை கண்டறிந்து, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள நோயாளிகளில் உடனடியாக தனிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…