கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது.
இந்நிலையில்,குரங்கு அம்மை பாதிப்புகள் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என தமிழக விமான நிலையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக,அமெரிக்கா,பிரிட்டன்,கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என சென்னை,கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலைய இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,தொடர் காய்ச்சல்,உடல் வலி,தோல் அலர்ஜி,அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்,கண்டிப்பாக 21 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம்,அனைத்து மாவட்ட சுகாதார செயலாளர்கள் தங்களது மாவட்டங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களது உடல்நிலை குறித்து தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…