தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனைதொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக 4 மாதங்களுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்து 5 தீர்மானங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பத்திர தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் தயாரிக்க ஆலையை திறக்க வேந்தாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர். எஸ்.பி.ஜெயக்குமார், உதவி பேராசிரியர் கனகவேல், ஓய்வு பெற்ற அதிகாரி அமர்நாத், தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரி பெல்லார்மின் உள்ளிட்டோர் கொண்ட குழு ஆய்வு செய்கின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…