ரஜீவகாந்தி மருத்துவமனையில் கண்காணிப்பு மையம் – திறந்த வைத்தார் முதலமைச்சர்!
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.364 கோடியில் 47 தீவிர சிகிச்சை படுக்கைகள், அதிநவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5.34 கோடியில் இருபது 108 வாகனங்களையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டமும் திறக்கப்பட்டது. இதனிடையே, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.