2 கோடி முகக்கவசங்களை சென்னை இராணுவ தொழிற்சாலையில் தயாரிக்க முடிவு -மத்திய அரசு தகவல்

2 கோடி முகக்கவசம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது மத்திய அரசு .
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.குறிப்பாக முகக்கவசங்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ஆவடி ராணுவ உடை தொழிற்சாலை உள்ளது. தற்போது முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்து உள்ள நிலையில் இந்த தொழிற்சாலையில் வைத்து 2 கோடி முகக்கவசம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.