ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுள்ளது – ஜி.கே.வாசன்
ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிகமான வெற்றி, செயற்கையான வெற்றி என ஜி.கே.வாசன் பேட்டி.
ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், 1,09,959 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 979 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமாக தலைவர் ஜி.கே.வாசன், இடைத்தேர்தல் வெற்றி என்பது திமுக மற்றும் கூட்டணி கட்சியின் முறைகேடுகளால் நடந்தது.
ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுள்ளது; ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிகமான வெற்றி, செயற்கையான வெற்றி என தெரிவித்துள்ளார்.