அரிசிக்கு பதில் பணம் : ஆளுநர் உத்தரவு செல்லும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published by
Venu

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என்று  பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த தீர்மான அறிக்கையுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை  சந்தித்தபோது, இதற்கு கிரண்பேடி  மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  அறிக்கை மூலமாக விளக்கம் அளித்தார் .அதில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை .மக்கள் தரமான அரிசியை வாங்கிக் கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்கக் கூறினேன். இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது என்று கூறினார்.பின்னர் இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் அரிசி தான் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்குஇடையில் தான் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை  உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.அப்பொழுது அவர் , புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

Recent Posts

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

2 hours ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

3 hours ago

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…

3 hours ago

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…

3 hours ago

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…

4 hours ago

தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago