இன்ஸ்டாகிராம் மூலம் பணம் மோசடி!! வாலிபர் கைது
கோவை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, இவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேவதியை, அவருடன் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா என்ற நபர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவர் ரேவதியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்நிலையில், இதற்க்கு ரேவதி சம்மதித்தார். மேலும் ரேவதியிடம் ரூ 7லட்சம் பணமும் கேட்டு வாங்கியுள்ளார்.
ஒருநாள், ரேவதியை தொடர்பு கொண்ட சின்னு ஜேக்கப் என்பவர் தாம் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், அவருடைய நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ரேவதி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், அவரை கோவைக்கு வரவழைத்த ரேவதி, தனது நண்பர்களின் உதவியுடன் ஜிதின்ஷாவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.