பணமா? மக்கள் மனமா? ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பரப்புரை – முக ஸ்டாலின்

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையை தொடங்கவுள்ளேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முக ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையை தொடங்கவுள்ளேன் என்றும் கிராமசபை கூட்டங்கள் முடிந்தபிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும். திமுகவுக்கு அண்ணா மற்றும் கலைஞர் என இரண்டு பலம் உள்ளது. நான் என்பதை விடுங்கள், நாம் என்று மாறினால் தான் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். இதையும் மீறி 6-வது முறையாக வெற்றி பெற வேண்டும். பணமா? மக்கள் மனமா? என்ற நிலையை மாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். பணத்தை வெல்லும் ஆற்றலை மக்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025