Election2024: சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளனர். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ரூ.500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொண்டு செல்லப்பட்டவர்களில், ஒருவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதால் இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா..? என விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையில் நைனார் நாராகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு சோதனை செய்யும்போது ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…