அதிமுக எம்பி முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முகமது ஜான் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென்று மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாய் ஒலித்தவர் எனவும் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், உறவினர்கள், அதிமுக-வினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம், ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…