திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பிரதமர் மோடி
மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார்.அப்பொழுது ஸ்டாலின் & குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப்பூர்வ ஆலோசனையை திமுக தரும் என்று ஸ்டாலின் தெரிவித்ததாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.