தமிழகத்து மோடி வரும் செய்தி…! #gobackmodi ஹேஷ் டாக்கை பயன்படுத்த ரெடியான நேட்டீசன்கள்..!
பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்ற செய்தி வந்ததும் மீண்டும் ஹேஷ் டாக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குகிறார், பிரதமர் நரேந்திர மோடி .பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்ற செய்தி வந்ததும் அதிகம் மகிழ்ச்சி அடைந்தது நேட்டீசன்கள் தான்.
ஏனெற்றால் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKMODI இந்த ஹேஷ் டாக்கை ட்ரெண்டாக்கினர்.
இந்நிலையில் இதை மீண்டும் ட்ரெண்ட் செய்யும் நோக்கில் தற்போது மீண்டும் #gobackmodi என்ற ஹேஷ் டாக்கை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.