எங்கும் இந்தி, எதிலும் இந்தி… பிரதமர் மோடியின் சாதனை.! முதல்வர் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

MK Stalin : மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நபுவார்கள்.? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளின் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். நமோ எனும் செயலி மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி. எனது பூத் வலிமையானது என்ற தலைப்பில் பேசுவையில், எனக்கு தமிழ் மொழி தாய் மொழியாக இல்லாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும், தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்பது மனதில் ஆழமான வலியாக உள்ளது என்றும் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது விமர்சனத்தை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அதில் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது பிறகு எப்படி தமிழர்கள் நம்புவார்கள் என கேட்டு இருந்தார்.

அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறுகையில், நேற்று மாலைச் செய்தி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலைச் செய்தி – அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? 

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும். ஆனால், மோடியின் கண்ணீர், ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே, கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கியாரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு என்பதும். விமானங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. எங்கும் இந்தி. எதிலும் இந்தி என மாற்றியதுதான் மோடி அரசின சாதனை. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என பிரதமர் மோடியின் தமிழ் கருத்துக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். 

Recent Posts

AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…

13 minutes ago

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

1 hour ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

2 hours ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

3 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

5 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

5 hours ago