பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்தனர். பின்னர் அங்கு உள்ள சிற்பங்களை இருவரும் பார்வையிட்டனர். அப்போது சிற்பங்களின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு விளக்கம் கொடுத்தார்.
இன்று சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியை 2-வது நாளாக சந்தித்து பேச கோவளம் வருகை தந்துள்ளார். இதற்காக கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது காலில் செருப்பு அணியாமல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை தனது கையால் குப்பைகைளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார்.
மோடி சுமார் அரை மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்டார். பிறகு மோடி சேகரித்து குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி , பொது இடங்களில் தூய்மையாகவும் , சுத்தமாகவும் வைக்க பொதுமக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…