“நீட் போன்ற தேர்வை பிரதமர் மோடி எழுத வேண்டும்!”- சீமான்
அமைச்சர்களை நீட் போன்ற தேர்வுகள் எழுத சொல்ல வேண்டும் எனவும், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுத வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நாட்டை ஆள்கிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது என கூறிய அவர், நாட்டிலுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வு வைத்து எழுத சொல்லவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அவ்வாறு தேர்வு வைத்தால், நாட்டில் நாட்டில் மிக தகுதியான அமைச்சர்கள் வருவார்கள் என நினைபவதாகவும், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுதவேண்டும் எனவும், அடுத்த தேர்வை கல்வித்துறை அமைச்சர் எழுத வேண்டுமென தெரிவித்துள்ளார்.