தைரியம் இல்லாததால் ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் மோடி – கேஎஸ் அழகிரி
அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சி என்று கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் காட்சிக்கு நீதியின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உண்டு. நீதியின் முறையிலும், அரசியல் முறையிலும் இதில் போராடி வெற்றி பெறுவோம் என்று எங்கள் தலைவர் கார்கே கூட கூறியுள்ளார்.
குஜராத் மண்ணில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வராது என எனக்ளுக்கு தெரியும். ஆனால், உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். ராகுல் காந்தியை நேருக்கு நேர் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள பிரதமர் மோடி அச்சப்படுகிறார். தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் ராகுல் காந்தியை சிறகு அனுப்ப துடிக்கிறார் மோடி.
அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் மோடி. இதனால் பின்புற வாசலில் வந்து ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட கூடாது என்று சதி தீட்டுகின்றனர். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெரும், ராகுல் காந்தி தான் பிரதமராக வருவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் ரீதியாக செயல்படுவதாகவும் கேஎஸ் அழகிரி குற்றசாட்டியுள்ளார்.