வணக்கம் நல்லா இருக்கீங்களா? எப்படி வந்தது இந்த யோசனை.? தூத்துக்குடி சலுன் கடைக்காரரிடம் மோடி…

பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் 70வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பண்டிகை காலம் மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குவது, கொரோனாத் தொற்று போன்றவைகள் குறித்து பிரதமர் மோடி பேசினர்.
மேலும் மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வருகின்ற பொன் மாரியப்பனுடன் நேடியாக பிரதமர் மோடி உரையாடினார்.
அந்த உரையாடலில் வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய பிரதமர் மோடி, நூலகம் நடத்தும் யோசனை உங்களுக்கு எப்படி வந்தது எனக் கேட்டார்.
மோடி மாரியப்பனிடம் பேசும் போது ஒருசில வார்த்தைகளை தமிழிலேயே பேசினார் மேலும் பேசிய பிரதமர் மோடி விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் நடப்பாண்டில் மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று தகவல் தெரிவித்தார்.
மேலும் கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பண்டிகைகள கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும் காதி விற்பனை நிலையங்களில் விற்பனைய் செய்யப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025