மோடிக்கு காவடி தூக்கும் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
மோடிக்கு காவடி தூக்கும் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாடுபடுங்கள்.
மதுரை வண்டியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என டிஜிபியிடம் மனு அளிக்கும் இந்த அமைச்சர்களா தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்?, எடப்பாடி அரசு தமிழகத்தில் ஊழலில் தான் வெற்றி நடைபோடுகிறது. தமிழகத்தில் மோடி தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் அதிமுக-பாஜக கூட்டணி டெபாசிட் வாங்காது என்றும், மோடிக்கு காவடி தூக்கும் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாடுபடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.