மோடி ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது – கே.எஸ்.அழகிரி
கொரோனா பரிசோதனைக் கருவிகளை தேடிக்கொண்டிருப்பது மோடி ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்தியாவின் மொத்த ஜி.டி.பி.யான ரூபாய் 225 லட்சம் கோடியில் ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மத்திய அரசுக்கு 3 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது 12 முறை கலால் விலை உயர்த்தியதால் ரூபாய் 20 லட்சம் கோடி வருவாய் உயர்ந்திருக்கிறது. இதை நிவாரண உதவிக்கு பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 84 நாட்கள் ஆகியும் உரிய பரிசோதனைக் கருவிகளை தேடிக்கொண்டிருப்பது மோடி ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது.இதுதான் ஒரு திறமையான ஆட்சிக்கு இலக்கணமா? எனவே சுதந்திர இந்தியா காணாத சோதனையில் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசிடமிருக்கும் அனைத்து நிதியாதாரங்களையும் பயன்படுத்தி உரிய செயல்திட்டங்களை வகுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைச்சரிவை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஏறக்குறைய ரூபாய் 20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது. இத்தகைய நிதியாதாரங்களை பயன்படுத்தி கொரோனா pic.twitter.com/AncDnzNXeF
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 25, 2020