இந்நிலையில் புதுச்சேரியில் ‘துாய்மையே சேவை’ திட்டத்தை துவக்கி வைத்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி களத்தில் இறங்கி வேட்டியை மடித்துக்கட்டிய முதல்வர் திடீரென கழிவு நீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் துார்வாரி சுத்தம் செய்தார். இச்செயலுக்காக முதல்வர் நாராயணசாமிக்கு அனைவரிடத்திலும் பாராட்டுகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட மோடி ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் நாராயணசாமியின் இந்த செயலுக்கு பலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.காரணம் பிரதமர் மோடி கூட இப்படி களத்தில் இறங்கி இந்த தூய்மை இந்தியா திட்டத்தை கையில் எடுக்கவில்லை ஆனால் முதல்வர் நாராயணசாமி மடார்ரென்று அதிரடியாக கையில் எடுத்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
DINASUVADU