தமிழ்நாடு முன்னேற மோடி, பழனிசாமி என்ற டபுள் எஞ்சின் தேவை – சி.டி.ரவி

Default Image

தமிழகம் முன்னேற வேண்டுமென்றால், நரேந்திர மோடி, பழனிசாமி என்ற டபுள் எஞ்சின் தேவை.

பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை கூறி வருகிறார் என்றும், இந்துக்களை மட்டும் இழிவுபடுத்த ஸ்டாலின், ஆத்திகரா? அல்லது நாத்திகரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் வேலொடு சென்று, வேல் விவகாரத்தில் நாடகமாடி வருகிறார் என்றும், திமுகவின் ஆட்சி காலத்தில் மின்வெட்டு, வேலை இழப்பு போன்றவை இருந்தது என்றும்,  காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது தான், நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகம் முன்னேற வேண்டுமென்றால், நரேந்திர மோடி, பழனிசாமி என்ற டபுள் எஞ்சின் தேவை என்றும்,  முதலமைச்சர் தாயார் குறித்து  ஆ.ராசா அவதராக பேசிய கண்டனத்திற்குரியது என்றும்,  இதுபோன்று பேசுவது திமுகவின் டிஎன்ஏ என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்