மோடி என்றால் அதானி, அதானி என்றால் மோடி – காங்கிரஸ்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டுற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கிரீஸ் நாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி தனது கிரீஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருப்பது உங்களுக்குத் தெரியும், அங்கு அவர் கிரீஸ் துறைமுகங்களிலும் ஆர்வம் காட்டினார்.
இப்போது செய்தி என்னவென்றால்… கிரீஸ் துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்த உள்ளது. இதன் அர்த்தம், இந்த முறையும் வெளிநாடு சென்று வந்தது அவர் நண்பர்க்கு ஒப்பந்தம் வாங்கித் தரத்தான். மோடி என்றால் அதானி, அதானி என்றால் மோடி என்று பொருள்.’ என பதிவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது கிரீஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருப்பது உங்களுக்குத் தெரியும்,
அங்கு அவர் கிரீஸ் துறைமுகங்களிலும் ஆர்வம் காட்டினார்.
இப்போது செய்தி என்னவென்றால்…
கிரீஸ் துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்த உள்ளது.
இதன் அர்த்தம், இந்த முறையும் வெளிநாடு சென்று…
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) August 28, 2023