மக்களவை தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததால் தோல்வி அடைந்தோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது.மக்களவையில் 1 இடத்திலும் ,இடைத்தேர்தலில் 9 இடத்திலும் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக கூட்டணி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் ,தமாக,புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக படு தோல்வி அடைந்தது.அதிமுக தேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் விழுப்புரத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், நான் வெளிப்படையாக சொல்கிறேன், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.அதிமுக இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததின் காரணத்தினாலே ஒரு சமுதாயத்தின் வாக்குகளை இழந்துவிட்டோம்.இந்த வாக்குகள் மோடிக்கு எதிரானது தான்.இனி கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துவிட்டார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…