பாரத பிரதமர் மோடி இல்ல ,பாரத பிரதமர் அப்துல்!பிரச்சாரத்தில் உளறிய அமைச்சர் சரோஜா
தேர்தலில் ‘பாரத பிரதமர் அப்துல்’ என்று அமைச்சர் சரோஜா கூறியது அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரச்சாரம் செய்யும் அதேவேளையில் முக்கிய தலைவர் சிலர் வாய் உளறி மாற்றி பேசி விடுகிறார்கள்.இப்படி உளறுவது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பிரதமர் பெயரை மாற்றி கூறியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா காக்காவேரி பகுதியில் நாமக்கல் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில்,பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதில் ‘பாரத பிரதமர் அப்துல்’ என்று கூறியது அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.அதன் பின்னர் பிரதமர் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று மாற்றி கூறினார்.