கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி – கே.எஸ்.அழகிரி
கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என கேஎஸ் அழகிரி விமர்சனம்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி அரசுகள் படுதோல்வி அடைந்துள்ளன என குற்றசாட்டியுள்ளார்.
கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என விமர்சனம் செய்துள்ளார். 12 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது ஏற்புடையது அல்ல. தடுப்பூசி உற்பத்தி பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட மோடி தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தலில் கவனம் செலுத்திய மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.