மோடி தமிழில் டிவிட்..! துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தொய்வு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் தற்போது ஆழ்துளை கிணறுக்கு அருகில் சுரங்கம் தோண்டும் பணியை ரிக் இயந்திரம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் @EPSTamilNadu உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
— Narendra Modi (@narendramodi) October 28, 2019
இந்நிலையில் சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி சிறிது நேரத்திற்கு முன் தமிழக முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதை தொடர்ந்து தற்போது மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.
அதில் “துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன். சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் @EPSTamilNadu உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தமிழில் ட்விட் செய்து உள்ளார்.