தமிழகத்தில் நடப்பது மோடி அரசின் அடிமை ஆட்சி.! புதுவை முதல்வரின் பகிரங்க பேச்சு.!

Default Image
  • புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
  • முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக, புதுச்சேரி மாநில அரசு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. பின்னர் மோடியின் மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சிக்கிறது என்று தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்தும், மத்திய அரசால் மாநில அரசுகள் தொடர்ந்து பல திட்டங்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக, புதுச்சேரி மாநில அரசு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. இதைதொடர்ந்து மொழிக் கொள்கை குறித்து ஏற்பட்ட சர்ச்சையின் போது மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து அதை அமல்படுத்த மாட்டோம் என்று முடிவெடுத்தோம். ஆனால், தமிழகத்தில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் கொடுத்ததில்லை, இதன் மூலம் தமிழகத்தில் எப்படி அடிமையாட்சி நடக்கிறது, என்பது தெரிய வருகிறது. நரேந்திர மோடியின் மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மீனவர் பிரச்சினை, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல் போன்றவற்றை தொடர்ந்து, தற்போது நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற எந்த திட்டமாக இருந்தாலும், அதில் மத்திய அரசின் விருப்பத்தை மட்டுமே இங்கே செயல்படுத்துகின்றனர், என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்