மற்றுமொரு அநீதியை அரங்கேற்றிய மோடி அரசு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்!
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது.
கேள்வி கேட்க பணம் பெற்றதாக கூறப்பட்டது தொடர்பாக இன்று மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து நீக்கம்!
நாடாளுமன்ற விதிகளை மீறி மாண்பை கலைக்கும் வகையில் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மகுவா மொய்த்ரா கூறியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மற்றுமொரு அநீதியை மோடி அரசு அரங்கேற்றியுள்ளது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், ரிஷிகாந்த் துபே முதல் ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது
எம்பி பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.