பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது- ப.சிதம்பரம்..!
தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர். தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.
தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்..? முந்திய அரசு எண்ணெய் பத்திரங்கள் வெளியிட்டதால் அரசு பெட்ரோல் விலையை குறைக்க முடியவில்லை என்பது அம்பலமானது. இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக வந்தால் குடியுரிமை தர சட்டத்தில் இடமில்லை. குடியுரிமை திருத்தத்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்பு. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை என்றும் மோடி அரசு கூறியது உண்மை இல்லை.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மோடி அரசு தவறான தகவல் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும் என கூறினார்.