வெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் புகைப்படம்..!
பிரதமர் மோடி வழக்கமாக அணியும் குர்தாவை அணியாமல் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள சிறப்பங்களின் சிறப்பை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மோடி விளக்கம் அளித்தார்.அப்போது மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
பின்னர் வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்றவாறு பிரதமர் மோடி, சீன அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.