பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் கமல் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி, அதிமுக ஓட்டை பிரிக்க பார்க்கிறார். அவர் திமுகவின் கைக்கூலி, பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன். அவரை பார்த்து பயப்பட வேண்டாம். இந்த தேர்தலில் வானதி சீனிவாசன் நிச்சயமாக வெற்றி பெறுவார். கம்யூனிஸ்டுகள் பல காரணங்களுக்காக திமுக கூட்டணியில் இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்.
மேலும் அவர் கூறுகையில், மோடியும் அமித்ஷாவும் மிகப் பெரிய அறிவாளிகள். ஆனால் மிகவும் சாதாரணமானவர்கள். வாழ்வில் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் 24 மணி நேரமும் உழைப்பவர்கள் என்று அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. அச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் தான் நமது மண்ணில் இருக்கும் அந்நியர்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…