சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் மிதமான மழை.!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில நகர் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு என்று நேற்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, அசோக்நகர், கோடம்பாக்கம்,வளசரவாக்கம்,போரூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.