அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதன்காரணமாக அடுத்தஇரு தினங்களுக்கு தமிழகம் – புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும் .
கனமழை பொறுத்தவரையில் நீலகிரி,கோவை, தேனி ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.